1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold price increases today

சவரனுக்கு ரூ.1216 அதிகரித்து ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை!

Tamilnadu
கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது மீண்டும் ஏறுமுகத்தில் விற்பனை ஆகி வருகிறது.
 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் கடந்த மாதம் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது மீண்டும் ஏறுமுகத்தில் விற்பனை ஆகி வருகிறது.
 
ஆம், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.38 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,922க்கும், சவரனுக்கு ரூ.304 அதிகரித்து ஒரு சவரன் ரூ.39,376க்கும் விற்பனை ஆகிறது. மேலும் கடந்த 6 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1216 அளவுக்கு விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
About Writer
Sugapriya Prakash