1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
  4. J.Deepa supports ADMK mega alliance election

மெகா கூட்டணியில் இணைந்த குட்டியம்மா... டெபாசிட் வாங்குமா திமுக??

அதிமுக
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தலைவர் தீபார் சற்றுமுன் அறித்துள்ளார். 

 
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, தினகரன் கட்சி, சீமான் கட்சி, கமல் கட்சி ஆகிய ஐந்து முனை போட்டி உறுதியாகியுள்ளது. இதற்கு முன்னர் தீபா கட்சியும் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்ற அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து பின்வாங்கியுள்ளார். 
 
ஆம், தற்போது அவர் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால், அதிமுக உருவாக்கியுள்ள மெகா கூட்டணி மேலும் பலம் வாய்ந்ததாக மாறியுள்ளது. அதிமுக தொண்டர்கள் நான் தனித்துபோட்டியிட்டால் வருத்தப்படுவார்கள் என எண்ணியே இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 
 
மேலும், அதிமுகவின் வெற்றிக்காக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை கடுமையாக உழைப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு பின்னர் அதிமுகவுடன் இணைவது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். 
அடுத்த கட்டுரையில்
திருப்பரங்குன்றம் தேர்தலில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர் நீதிமன்றம்