வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By
Last Updated : வியாழன், 21 மார்ச் 2019 (21:06 IST)

தமிழிசைக்கு ஓட்டு கேக்க சொன்னா.. கனிமொழிக்கு ஓட்டு கேட்ட மெகா கூட்டணி மகான்!

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தீவிர பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுப்பட்டு உள்ளன. 
 
இந்நிலையில், இடைத்தேர்தல் நடக்கும் 18 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள விளாத்திகுளம் தொகுதியில், அதிமுக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன்.
 
இவர் அந்த தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். நம்முடைய கட்சியின் வேட்பாளராக, நம்முடைய புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியோடும், புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் ஆசியோடும், இந்திய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆசியோடும் அன்பிற்கினிய சகோதரி கனிமொழி.. என பேசினார். 
 
இவர் கனிமொழி என கூறியது, மேடையில் இருந்தவர்கள் மத்தியிளும், பொதுமக்கள் மத்தியிளும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இதன் பின்னர் சுதாரித்துகொண்ட அவர், அன்பிற்கினிய சகோதரி தமிழிசை சௌந்தர்ரஜன் அவர்களுக்கு அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பேசி முடித்தார்.