வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 22 மார்ச் 2019 (16:31 IST)

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை புகழ்ந்து தள்ளிய அதிபர்

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் அதவாது 2009 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளும் ஈழத்தின் பால் துடித்தது. இலங்கை அதிபர் ராஜபக்‌ஷேவின் ராஜதந்திரத்தால் விடுதலைப் புலிகளின் ராஜ்ஜியம் முடிவுக்கு வந்தது.  அப்போது இலங்கை சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற போரில் பல லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். விடுதலைப்புலிகளின் தலைவர்  பிரபாகரனும் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் இந்தப் படுகொலைக்கு அப்போது இந்தியாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் உதவியாக இருந்தது என்றும், தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுகவும் மவுனமாயிருந்ததாக தகவல் வெளியானது. இதனையடுத்து இவ்விவகாரம் ஐநாசபை வரைக்கும் எதிரிலித்தது. 
 
இந்நிலையில் இலங்கையில் சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி விழா நடைபெற்றது. இதில் அந்நாட்டு அதிபர் மைத்ரி பால சிரிசேனா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
 
அப்போது அவர் கூறியதாவது ;
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தான்  இலங்கையில் உள்ள 28 % வனப்பகுதியை காப்பாற்றினார். பிரபாகரன் ஒரு போராளி என தெரிவித்தார்.

மேலும் போர் நடைபெற்ற பகுதிகளை தவிர மற்ற வனப்பகுதிகள் அழித்துவிட்டதாகவும் தெரிவித்தார். இந்த அழிவுக்குக் காரணம் இலங்கையில் உள்ள அரசியல்வாதிகள், மற்றும் சட்டவிரோதமான தொழில் ஈடுபடுவோர் தான் என்று குற்றம் சாட்டினார்.