ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (12:54 IST)

வாக்களித்தார் நடிகர் விஜய்...! ரசிகர்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு..!!

Vijay
தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தார்.
 
தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.  வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளில் வரிசையில் நின்று தங்கள் வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், பனையூர் இல்லத்தில் இருந்து சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு காரில் வந்தார். நடிகர் அஜித்தை போன்று வெள்ளை சட்டை அணிந்திருந்த விஜய், இடது கையில் பேண்டேஜ் உடன் வாக்கு சாவடிக்கு மையத்திற்கு வந்தார். அப்போது விஜயை காண ரசிகர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 
இதன் பின்னர் அங்க பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ரசிகர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து வாக்கு சாவடி மையத்திற்கு சென்ற விஜய் தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றினார். தமிழக வெற்றிக் கழக தலைவரான பின் நடிகர் விஜய் முதல் முறையாக வாக்களிப்பது குறிப்பிடத்தக்கது.