திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 18 ஏப்ரல் 2024 (11:52 IST)

நாளை தேர்தலுக்கு இலவச ரேபிடோ சேவை.. இந்த Code ஐ போட்டா போதும்! – அசத்தல் அறிவிப்பு

Free Rapido
நாளை மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இலவச ரேபிடோ சேவை அளிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.



நாளை தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 39 தொகுதிகளிலும் 68,321 வாக்குச்சாவடிகளில் மக்கள் வாக்களிக்க உள்ளனர். மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வர பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேர்தல் நாளான நாளை அரசு போக்குவரத்துக்கழக நகர பேருந்துகளில் இலவச பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது, அதுபோல தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தனியார் பைக் டாக்சி நிறுவனமான ரேபிடோ உடன் இணைந்து இலவச பைக் டாக்சி சேவையை வழங்குகிறது.


தமிழ்நாட்டின் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 5 நகரங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க செல்ல ஏதுவாக இந்த இலவச சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி செல்லும் வாக்காளர்கள் ரேபிடோ செயலியில் பைக் டாக்சி புக் செய்து “VOTENOW” என்ற Code ஐ பயன்படுத்தினால் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K