வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (10:40 IST)

ஓட்டு போட்டே ஆகணும்.. ஓட்டு மெஷினோடு 22 கி.மீ மலையேறிய அதிகாரிகள்! – தேர்தல் ஆணையம் பகிர்ந்த வீடியோ!

Arunachal pradesh
இன்று தமிழ்நாடு, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாவட்டங்களில் 107 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறும் நிலையில் தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.



இன்று நாட்டின் பல பகுதிகளில் மக்களவை முதற்கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில் தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் அலுவலர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். தேர்தலுக்காக வாக்கு எந்திரங்களை பூத்களுக்கு கொண்டு செல்வது, பாதுகாப்பு பணி என பல அரசு ஊழியர்கள், தேர்தல் அலுவலர்கள், துணை ராணுவம் கண்ணும் கருத்துமாய் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மலைகள் சூழ்ந்த மாநிலமான அருணாச்சல பிரதேசத்திலும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. அருணாச்சல பிரதேசத்தில் பல கிராமங்கள் மலை மீது உள்ள நிலையில் அதிகாரிகள் பெரும் முயற்சி செய்து அப்பகுதிகளில் தேர்தலை நடத்தி வருகின்றனர். அருணாச்சல பிரதேசம் பொம்டிலா சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டிங்சம்பம் கிராமத்தில் தேர்தலை நடத்த வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் உபகரணங்களை கழுதையில் ஏற்றிக் கொண்டு சுமார் 22 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று அதிகாரிகள் தேர்தல் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த வீடியோவை அருணாச்சல பிரதேச தேர்தல் ஆணையத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இதுபோல தமிழ்நாட்டிலும் பல மலைப்பாங்கான பகுதிகளில் நவீன முறையில் தேர்தல் உபகரணங்கள் கொண்டு செல்லப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.

Edit by Prasanth.K