தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்
- மோடியின் ஹெலிகாப்டரை சோதனை செய்த அதிகாரி – சஸ்பெண்ட் செய்த தேர்தல் ஆணையம் !
- மனைவி பிரேமலதாவுடன் வாக்களித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்
- எனக்கு ஓட்டு இல்லையாம் – ஆவேசமான நடிகர் ரமேஷ் கண்ணா !
- சென்னை சூளைமேட்டில் வாக்கு இயந்திரத்தில் கோளாறு – வாக்குப்பதிவு தாமதம் !
வாக்களித்த கையோடு விஜய் சேதுபதி சொன்ன வார்த்தை என்ன?
சென்னை கோடம்பாக்கத்தில் வாக்களித்த விஜய்சேதுபதி நல்லது நடைபெற காத்திருக்கிறேன் என கூறினார்.
தமிழகம், புதுவை உள்பட 97 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் விஐபிக்களும், பொதுமக்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதால் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள ஏராளமான வாக்குச்சாவடியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறாகியுள்ளதால் பொதுமக்கள் வாக்களிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி கோடம்பாக்கத்தில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். முதல் முறை வாக்களிப்பவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என கூறினார். மக்கள் அனைவருக்கும் இன்றைய அரசியல் சூழ்நிலை நன்றான தெரிகிறது. நல்லது நடக்கும் என்று நம்பிக்கையோடு இருப்பதாக அவர் கூறினார். அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
அடுத்த கட்டுரையில்
