திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 18 ஏப்ரல் 2019 (12:10 IST)

தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்

இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 30.62% வாக்குப்பதிவுகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் இன்று காலை முதல் ஓட்டுப்பதிவு வேகமாக நடந்து வருகிறது. சில பகுதிகளில் மின்னணு இயந்திரம் சிறிது பழுது காரணமாக  ஓட்டுப்பதிவு தாமதமானது.
 
தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 30.62% வாக்குப்பதிவுகள் பதிவாகி இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்  தெரிவித்துள்ளார்.
 
அதிகபட்சமாக ஆரணி தொகுதியில் 36.51% வாக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் இயந்திரம் பழுதான இடங்களில் உடனுக்குடன் மாற்று ஏற்பாடு செய்து வாக்குப்பதிவு செய்யப்படும் எனவும், தேர்தல் அதிகாரி சாஹூ தெரிவித்துள்ளார்.