வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: வியாழன், 18 ஏப்ரல் 2019 (10:11 IST)

சென்னை சூளைமேட்டில் வாக்கு இயந்திரத்தில் கோளாறு – வாக்குப்பதிவு தாமதம் !

வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துவரும் வேளையில் சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை எவ்வித அசம்பாவிதங்களும் இல்லாமல் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தத்தமது தொகுதிகளில் தங்கள் வாக்கைப்பதிவு செய்துவருகின்றனர். ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, கனிமொழி, கமல் ஆகியோர் காலையிலேயே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

அதிகபட்சமாக இதுவரை 10 சதவீத வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். ஆனால் சில இடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் இயந்திரக் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு பாதிககப்பட்டுள்ளது. சென்னை சூளைமேட்டில் உள்ள 8,9 மற்றும் 10 ஆகிய வாக்குச்சாவடிகளில் இயந்திரக்கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தடை செய்யப்பட்டுள்ளது.

இயந்திரங்கள் சரிசெய்யப்பட்ட பின்னர் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கும் எனவும் தாமதத்துக்குக் காரணமாக வாக்குப்பதிவு நேரம் அதிகரிக்கப்படும் என தெரிகிறது.