ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: வியாழன், 18 ஏப்ரல் 2019 (13:03 IST)

மதுரையில் வாக்கு எண்ணிக்கை அதிகம் – முடிந்தது சித்திரை தேர்திருவிழா !

மதுரையில் சித்திரைத் தேர் திருவிழாவும் வாக்குப்பதிவும் ஒரே நாளில் நடப்பதால் வாக்குப்பதிவு குறையுமோ என்ற சந்தேகத்துக்கு எதிராக மக்கள் அதிகளவில் வாக்களித்து வருகின்றனர்.

இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை எவ்வித அசம்பாவிதங்களும் இல்லாமல் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தத்தமது தொகுதிகளில் தங்கள் வாக்கைப்பதிவு செய்துவருகின்றனர். ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, கனிமொழி, கமல் ஆகியோர் காலையிலேயே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

மதுரையில் இன்று வாக்குப்பதிவோடு சித்திரை தேர் திருவிழாவும் நடைபெற இருப்பதால் மதுரையில் மட்டும் தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் அதற்கு மறுப்புத் தெரிவித்த தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு நேரத்தை மட்டும் 2 மணி நேரம் அதிகரித்தது.

இதையடுத்து மதுரையில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்பிற்கு மாறாக மதுரையில் மக்கள் அதிகளவில் வாக்களித்து வருகின்றனர். காலை 11 மணிவரை மதுரை தொகுதியில் 25 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. சித்திரைத் தேர் விழாவும் முடிந்துவிட்டதால் இனி மக்கள் வாக்களிப்பது அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மதுரையில் வழக்கத்தை விட அதிகளவில் வாக்குப்பதிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.