தொடர்புடைய செய்திகள்
- அகில இந்திய மக்கள் கழகம் சார்பில் கரூர் வேட்புமனு தாக்கல்
- விளையாட்டிலும் அரசியல்... 'தளபதி 63' படத்தின் கதை இதுதானா.. சூப்பர் அப்டேட்
- எச்.ராசா, தமிழிசை, பொன்னார்; பாஜகவின் சூப்பர் கேன்டிடேட் லிஸ்ட்!
- எல்லாம் ஸ்பெல்லிங் மாற்றம்தான்; வாரிசு அரசியல் தலைகளை சீண்டும் கமல்!
- மட்டன் பிரியாணி 200ரூ… சிக்கன் பிரியாணி 180 ரூ – தேர்தல் ஆணையம் நிபந்தனை !
வேட்புமனுத்தாக்கல் செய்தார் பிரகாஷ்ராஜ் – கிடைக்குமா வெற்றி ?
பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட இருக்கும் நடிகர் பிரகாஷ்ராஜ் நேற்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
நடிகர் பிரகாஷ்ராஜ் தனது தோழி கௌரி லங்கேஷை இந்துத்வாவாதி ஒருவர் சுட்டுக்கொன்றதில் இருந்து தீவிரமாக அரசியல் பேசி வருகிறார். அதிலும் பாஜக வையும் இந்துத்வா அரசியலையும் சங்பரிவார் அமைப்புகளையும் எதிர்த்து பல்வேறு அரசியல் கூட்டங்களில் கடுமையாகப் பேசி வருகிறார். சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த மாணவர் அமைப்புப் போராட்டத்திலும் கலந்துகொண்டு பேசினார். இதனால் பிரகாஷ்ராஜ் அரசியல் வருகை குறித்த பேச்சுகள் அவ்வப்போது எழுந்தன.
இதையடுத்து புத்தாண்டு அன்று தனது அரசியல் வருகையை உறுதி செய்தார் பிரகாஷ்ராஜ். மேலும் மக்களவைத் தேர்தலில் பெங்களூர் மத்தியத் தொகுதியில் தான் போட்டியிட இருப்பதாகவும் தன்னை மதச்சார்பற்ற கட்சிகள் யாவும் பொது வேட்பாளராக அறிவித்து ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். அவருக்கு ஆம் ஆத்மி கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. ஆனால் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால் மட்டுமே பிரகாஷ்ராஜுக்கு ஆதரவு அளிக்க முடியும் எனக் கூறி காங்கிரஸ் மறுத்துவிட்டது.
இதையடுத்து பெங்களூர் மத்திய தொகுதியில் பிரகாஷ் ராஜ் நேற்று தனது வேட்ப்புமனுவைத் தாக்கல் செய்தார். அவரது வேட்புமனுப் பெற்றுக்கொள்ளப்பட்டது. இந்த தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் மனுத்தாக்கல் செய்யவில்லை. பாஜக வேட்பாளர் நேற்று மனுத்தாக்கல் செய்தார்.
அடுத்த கட்டுரையில்
