எல்லாம் ஸ்பெல்லிங் மாற்றம்தான்; வாரிசு அரசியல் தலைகளை சீண்டும் கமல்!

Last Updated: புதன், 20 மார்ச் 2019 (16:55 IST)
அதிமுக, திமுக கூட்டணியில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார். 
 
தற்போது 21 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கமல்ஹாசன், மற்ற தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் 24 ஆம் தேதி கோவையில் வெளியிடப்படும் என்று அறிவித்தார். 
 
அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அவை பின்வருமாறு, நீங்கள் போட்டியிட வாய்ப்புள்ளதா? என கேட்டதற்கு 24 ஆம் தேதி பதில் கிடைக்கும் என கூறினார். அதன் பின்னர் வாரிசு அரசியல் பர்றி கேள்வி எழுப்பட்டது. 
 
அதற்கு, முன்பு சொல்வார்கள் Land of the rising sun என்று, இப்போது அதற்கு ஸ்பெல்லிங்கை மாற்றிவிட்டனர். அதாவது, SUN இல்லை, இப்போ SON என்றார். 


இதில் மேலும் படிக்கவும் :