செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வியாழன், 21 மார்ச் 2019 (09:00 IST)

விளையாட்டிலும் அரசியல்... 'தளபதி 63' படத்தின் கதை இதுதானா.. சூப்பர் அப்டேட்

நடிகர் விஜய் 'தளபதி 63' படத்தில் நடித்து வருவது ஊரறிந்த விஷயம். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து அட்லி, தளபதி விஜய்யின் படத்தை மூன்றாவது முறையாக இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். கதிர் மற்றும் அவரது நண்பர்கள் கால்பந்து பயிற்சியினை  மேற்கொள்கிறார்கள். கதிர் மற்றும் நண்பர்கள் கால்பந்து விளையாட்டில் உள்ள அரசியலால் பாதிக்கப்படுகிறார். விஜய் எப்படி கால்பந்து அரசியலை  தோலுரித்து தன்னை நம்பி கதிர் நண்பர்களை எப்படி காப்பாற்றி திறமையை உலகுக்கு கொண்டு செல்கிறார் என்பதே கதை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 
தளபதி 63 படத்தின் சென்னை காட்சிகள் எடுக்கப்பட்டு முடிந்த பிறகு பிறகாட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளது. போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடிந்த பின் தீபாவளிக்கு 'தளபதி 63' படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.