புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By c.anadakumar
Last Updated : வெள்ளி, 22 மார்ச் 2019 (18:52 IST)

அகில இந்திய மக்கள் கழகம் சார்பில் கரூர் வேட்புமனு தாக்கல்

நடைபெற உள்ள 17 வது பாராளுமன்ற தேர்தல் நாடெங்கிலும் தீவிரமாக பிரச்சாரம் ஒரு புறம் இருக்க, வேட்புமனு தாக்கலும் ஒரு புறம் தீவிரமாக வேட்பாளர்கள் செய்து வருகின்றனர். 

இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய, இன்று நான்காவது நாளான இன்று முதலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் கருப்பையா என்பவர் தாக்கல் செய்தார். 
 
இதனையடுத்து, அகில இந்திய மக்கள் கழகம் கட்சி சார்பில் சுப்பிரமணி என்பவர் இரண்டாவது மனுவாக வேட்புமனுக்களை இன்று தாக்கல் செய்தார். 
 
இவர் ஏற்கனவே அக்கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் பதவி வகித்த வந்த நிலையில், ஏற்கனவே, 2006 மற்றும் 2016 ஆகிய வருடங்களில் சட்டசபை தேர்தலுக்கு மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு வேட்பாளராக நின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும்., வேட்பாளர் சுப்பிரமணியின் சொந்த ஊர், திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துவரங்குறிச்சி பகுதியாகும், இவரின் சொத்து மதிப்பு ஒன்றரை லட்சம் ஆகும் என்று தெரிவித்தார். 
 
மேலும், முழு நேர அரசியல் வாதியான இவர், பொதுமக்களின் நிலைகளை அறிந்து அந்த குறைகளை சரிசெய்யவும், நிரந்தர பிரச்சினைக்கு நல்ல தீர்வு காண்பதே இவரது நோக்கம் என்று கூறப்படுகின்றது.