செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. வேட்பாளர்கள் பேட்டிகள்
Written By
Last Modified: வியாழன், 11 ஏப்ரல் 2019 (13:45 IST)

’’காணாமல் போவது யார் ? தேர்தல் முடிவில் தெரியும் ‘’ - அன்புமணிக்கு ஸ்டாலின் சவால்

தமிழகம் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் இருபெரும் திராவிட தலைவர்களின் மறைவுக்குப் பிறகு அதிமுகவும், திமுகவும் மிகத்தீவிரமாக அரசியல் களத்தில் இறங்கியுள்ளனர். 
இந்நிலையில் இன்று புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார் ஸ்டாலின்.
 
அன்புமணி ராமதாஸ், வாக்குச்சாவடியில் ’’நம்ம ஆட்கள் தான் இருபோம் அப்புறன் என்ன என்று தன்கட்சி தொண்டர்களிடையே பேசினார் .’’ இது சர்சையானது.
இந்நிலையில் பிரபல தனியார் சேனல் நடத்திய நேர்காணலில்  ஸ்டாலினிடம் இதுபற்றி கேள்வி எழுப்பப்பட்டது. 
 
அதற்கு ஸ்டாலின் கூறியதாவது :
 
’’அன்புமணி யார் என்பது அனைவருக்கும் தெரியும் என்று தெரிவித்தார்.’’
 
அதேபோல் அன்புமணி ராமதாஸ் தேர்தலுக்குப் பிறகு திமுக காணாமல் போகும் என்று கூறியுள்ளாரே என்று கேள்வி எழுப்பட்டது.
 
அதற்கு பதிலளித்த ஸ்டாலின் ‘’தேர்தல் முடிவுக்குப் பிறகு காணாமல் போவது யார் என்பது தெரியவரும் ’’என்று தெரிவித்தார்.