வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 4 ஏப்ரல் 2019 (14:04 IST)

’கோழிக் குஞ்சைக் ’ காப்பாற்ற சிறுவன் என்ன செய்தான் தெரியுமா ?

புறாவை பருந்தியிடமிருந்து காப்பாற்ற நம் சங்க இலக்கியமான புறநானூற்றில் சோழப்பெருவேந்தனாகிய சிபிச் சக்கரவர்த்தி மன்னர், தன் உடலில் இருந்து சதையை  வெட்டி எடுத்து சீர் செய்யும் தராசில் புறாவின் எடைக்கு நிகரான அதை வைத்ததாக பாட்டு உள்ளது. அத்தகைய பெருமையைக் கொண்டது நம் நாடு.
இந்தக் காலத்தில் இந்த இரக்கத்தை எல்லாம் காண முடியாதுதான். எந்திரமயமான உலகில் மனிதர்களும் எந்திரமாகவே மாறிப் போகாத ஒரு குறைதான் உள்ளது.
 
மிசோரமில் 6 வயதான சிறுவன் டெரிக் ஒருவன் தன் பக்கத்து வீட்டினர் வளர்த்து வந்த ஒரு கோழிக் குஞ்சின் மீது தெரியாமல் தான் ஓட்டிவந்த சைக்கிளை  ஏற்றியிருக்கிறார்.
 
பின்னர் எப்படியாவதும் இந்தக் காயப்பட்ட குஞ்சைக் காப்பாற்ற எண்ணிய டெரிக், தன் வீட்டுக்குச் சென்று தான் சேமித்து வைத்திருந்த ரூ.10 எடுத்துக் கொண்டு கோழிக்குஞ்சை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.
 
ஆனால் குஞ்சு ஏற்கனவே இறந்து போயிருந்தது. இவர் மருத்துவமனைக்குச் சென்று இதைக் கூற அங்கிருந்த செவிலியர் டெரியைப் புகைப்படம் எடுத்து வெளிட்டுள்ளார். தற்பொது அப்புகைப்படம் வைரலாகி வருகிறது. குறிப்பாக சிறுவனின் மனிதநேயம் தான் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.