தேர்தல் ஆணையரின் பேச்சு சைகை மொழியில் மொழிபெயர்ப்பு : ஏன் தெரியுமா ?

tamilnadu
Last Modified வியாழன், 11 ஏப்ரல் 2019 (12:47 IST)
தமிழகம் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.  வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று தேர்தல் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்த்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது :
 
தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்காக ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 302 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயனபடுத்தப்படும்.
 
பெண்களுக்கு தனி வாக்குப்பதிவு மையம் ஒரு தொகுதி ஒன்று ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
94 ஆயிரத்து 653 விவியேட் இயந்திரங்கள் தயராக உள்ளன.
 
தமிழகத்தில் சுமார் 5.99 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில்  மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலுக்காக மொத்தம் 67 ஆயிரத்து 720 வாக்குச்சாவடி மையங்கள் இருக்கின்றன.
 
தேர்தல் நடத்த விதிகளை மீறியதாம இதுவரை 4185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தம்  ரூ.127.66 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
 
வாக்காளர் அடையாள அட்டை மட்டுமின்றி 13 ஆவணங்களை காட்டியும் வாக்களிக்கலாம்.ஆண் - 2,95,94,923: பெண்- 3, 02, 69,045 : மூன்றாம் பாலினம் - 5790  சத்யபிரதா சாஹீ இவ்வாறு தெரிவித்தார்.
 
வாய்பேச முடியாத, காதுகேளாதோருக்கும் புரியும் வகையில் சாஹூவின் பேச்சு சைகை மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.
 
மேலும் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறும் எனவே மக்கள் பயமில்லாமல் வாக்களிக்க வரலாம் என்று இன்று சென்னை டிஜிபி அலுவலகத்தில் டிஜிபியாக பொறுப்பேற்றுக்கொண்ட டிஜிபி அசுதோஷ் சுக்லா தெரிவித்தார்
 


இதில் மேலும் படிக்கவும் :