1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சுவரொட்டிகள்
Written By papiksha
Last Updated : சனி, 23 நவம்பர் 2019 (16:48 IST)

என்னடா தீபாவை ஜெராக்ஸ் எடுத்து வச்சிருக்கீங்க..? கிண்டலுக்குள்ளான "தலைவி" பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

மறைந்த முதல் ஜெயலலிதாவின் வழக்கை வரலாற்றை பல இயக்குனர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு இயக்க முந்தியடித்தனர். ஆனால், அந்த வாய்ப்பை இயக்குனர் ஏ.எல் விஜய் மிகும் துல்லியமாக பயன்படுத்திக்கொண்டார். ஜெயலலிதாவின் இளமைக்காலம் முதல் முதுமைக்காலம் வரை நான்கு தோற்றங்களில் உருவாகவுள்ள இப்படத்திற்கு  ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். 
"தலைவி" பெயரில் உருவாகிவரும் இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் மிகச்சிறந்த நடிகைகள் ஒருவரான கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளார். இந்தி, தமிழ் , தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகவுள்ள இப்படத்தில் ஜெயலலிதாவின் தோற்றத்தை பெறுவதற்காக அமெரிக்க சென்று டெஸ்ட் லுக் எடுத்தார் கங்கனா. அது சம்மந்தப்பட்ட போட்டோக்கள் அண்மையில் இணையத்தில் வெளியாகி வைரலானது. 
 
இந்நிலையில் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ர் கொண்ட வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்ஸ் என்னடா தீபாவை ஜெராக்ஸ் எடுத்து வச்சிருக்கிறீங்க...என கிண்டலடித்து வருகின்றனர்.