செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 18 செப்டம்பர் 2019 (16:14 IST)

ஜெயலலிதா லுக் டெஸ்ட் – அமெரிக்கா செல்லும் கங்கனா !

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ஒரே நேரத்தில் பல இயக்குனர்கள் படமாக எடுத்து வருகின்றனர். அதில் இயக்குனர் ஏ.எல்.விஜய் ’தலைவி’ என்ற பெயரில் உருவாக்கும் சினிமாவும் ஒன்று. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் தயராகவுள்ளது.  ஜெயலலிதவாக நடிக்க பாலிவுட் நடிகை கங்கனா ஒப்பந்தமாகியுள்ளார். மூன்று மொழி படங்களுக்கும் சேர்த்து நான்கு மாதங்கள் கால்ஷீட் கொடுத்து உள்ளாராம் கங்கனா. இதில் எம்.ஜி.ஆராக நடிக்க அரவிந்த்சாமி ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் தாமதமாகிக் கொண்டே வந்த படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் ஜெயலலிதாவின் இளமைக்காலம் முதல் முதுமைக்காலம் வரையிலான நான்கு தோற்றங்களில் தோன்ற இருக்கிறார். அதற்கான லுக் டெஸ்ட்டுக்காக அவர் அமெரிக்க சென்றுள்ளார்.  இதற்காக பிரத்யேக மேக்கப் மேன்கள் கங்கனாவுக்கான மேக்கப் டெஸ்ட்களை எடுக்க இருக்கின்றனர்.