1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : வெள்ளி, 11 அக்டோபர் 2019 (14:49 IST)

"தலைவி" படத்தின் ரகசியத்தை உடைத்த கங்கனா ரனாவத் - அப்போ கதை இது தானா?

மறைந்த முதல் ஜெயலலிதாவின் வழக்கை வரலாற்றை பல இயக்குனர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு இயக்க முந்தியடித்தனர். ஆனால், அந்த வாய்ப்பை இயக்குனர் ஏ.எல் விஜய் மிகும் துல்லியமாக பயன்படுத்திக்கொண்டார். ஜெயலலிதாவின் இளமைக்காலம் முதல் முதுமைக்காலம் வரை நான்கு தோற்றங்களில் உருவாகவுள்ள இப்படத்திற்கு  ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். 


 
"தலைவி" பெயரில் உருவாகிவரும் இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் மிகச்சிறந்த நடிகைகள் ஒருவரான கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளார். இந்தி, தமிழ் , தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகவுள்ள இப்படத்தில் ஜெயலலிதாவின் தோற்றத்தை பெறுவதற்காக அமெரிக்க சென்று டெஸ்ட் லுக் எடுத்தார் கங்கனாவின் போட்டோக்கள் அண்மையில் இணையத்தில் வெளியாகி வைரலானது. 


 
இந்நிலையில் நேற்று மாலை  கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஈஷா நர்சரிக்கு நடிகை கங்கனா ரனாவத் வந்திருந்தார். அப்போது காவிரி கூக்குரல் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த அவர், அதற்கு ரூ.42 லட்சம் நன்கொடையும் வழங்கினார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கங்கனா, தலைவி படத்தில் ஜெயலலிதா  கதாபாத்திரத்தில் நடிப்பதும், காவேரி கூக்குரல் இயக்கத்தில் பங்கேற்றிருப்பதும் தமிழ்நாட்டுடன் உறவினை தனுக்கு வலுப்படுத்தி வருகிறதென்றார். 


 
தன் வாழ்வில் சுயமாக சிந்தித்து செயல்பட்டு தனக்கான வாழ்வை தானே அமைத்துக்கொண்ட
ஜெயலலிதா அவர்களின்  வரலாற்றை படித்த போது என்னைப் போல நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதை நான் தெரிந்து கொண்டேன். சினிமா துறையில் அவர் சந்தித்த பல்வேறு இன்னல்களை நானும் சந்தித்துள்ளேன். இறுதி கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் முதல் பாதி முழுக்க  ஜெயலலிதாவின் 20 முதல் ,30, 40 வயதுகளில் நடந்த சம்பவங்ககள் அடங்கியிருக்கும். இரண்டாம் பாதியில்  அரசியல் சம்மந்தப்பட்டதாக எம்.ஜி.ஆர், கருணாநிதியுடனான தொடர்புகளும் அரசியல் பயணங்களும் அடங்கியிருக்கும். 
 
ஜெயலிதாவின் பன்முக திறமைகளை தலைவி படத்தின் மூலம் என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. என்னால் முடிந்த வரை அவரின் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறேன் என கூறினார். கங்கனா பேசியதை வைத்து தலைவி படத்தின் கதை என்ன என்பதை ஓரளவிற்கு யூகிக்க முடிந்துள்ளது. இதே சுவாரஸ்யம் படத்திலும் இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.