புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 8 அக்டோபர் 2019 (18:11 IST)

பரதம் பயிலும் கங்கனா!! எல்லாம் தலைவிக்காக...

நடிகை கங்கனா ரனாவத், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படட்திற்கு பரதநாட்டியம் பயின்று வருகிறார். இது குறித்த புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. 
 
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ஒரே நேரத்தில் பல இயக்குனர்கள் படமாக எடுத்து வருகின்றனர். அதில் இயக்குனர் ஏ.எல்.விஜய் ’தலைவி’ என்ற பெயரில் உருவாக்கும் சினிமாவும் ஒன்று. 
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் தயராகவுள்ளது. ஜெயலலிதவாக நடிக்க பாலிவுட் நடிகை கங்கனா ஒப்பந்தமாகியுள்ளார். மூன்று மொழி படங்களுக்கும் சேர்த்து நான்கு மாதங்கள் கால்ஷீட் கொடுத்து உள்ளாராம் கங்கனா. இதில் எம்.ஜி.ஆராக நடிக்க அரவிந்த்சாமி ஒப்பந்தமாகியுள்ளார்.
 
இந்த படத்திற்காக பரதநாட்டியம் கற்று வரும் கங்கனா ரனாவத்தின் சில புகைபடங்களை இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளன. பிரபல நடன இயக்குனர் காயத்ரி ரகுராமிடம் இருந்து பரதம் கற்று வருகிறார் கங்கான. 
இந்த படத்தில் கங்கானா ஜெயலலிதாவின் இளமைக்காலம் முதல் முதுமைக்காலம் வரையிலான நான்கு தோற்றங்களில் தோன்ற இருக்கிறார். அதற்கான லுக் டெஸ்டை அமெரிக்காபில் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.