திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By CM
Last Updated : வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (21:35 IST)

மேனேஜரை நியமித்த ‘பிக் பாஸ்’ தமிழச்சி!

ஒரு படத்தில் கமிட்டானதற்கே, தன்னுடைய கால்ஷீட்டைக் கவனிக்க மேனேஜரை நியமித்துள்ளாராம் ‘பிக் பாஸ்’ தமிழச்சி. கடந்த வருடம் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீரத்தமிழச்சியாக அடையாளம் காணப்பட்டவர் இவர். இவரின் போராட்டத்தைப் பார்த்து நிறைய பேர் இவருக்கு ஆதரவாக நின்றனர்.
 
ஆனால், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு இவரின் போக்கு மாறியது. சித்திர நடிகைக்கு எதிராகப் பேசி அனைவரின் எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்டார். இருந்தாலும், நெகட்டிவ் பப்ளிசிட்டி இவருக்கு கிடைத்தது.
 
இந்நிலையில், விமல் நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸான ‘மன்னர் வகையறா’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் இவர். அத்துடன், ஒரு படத்தில் ஹீரோயினாகவும் கமிட்டாகியுள்ளார். ஆனால், அந்தப் படத்தில் நடிப்பவர்கள் எல்லாருமே புதியவர்கள். அதற்குள் தன்னுடைய கால்ஷீட்டை கவனித்துக்கொள்ள ஒரு மேனேஜரை நியமித்துள்ளாராம் இவர். ஒரு படத்திற்கே இந்த ஆட்டமா என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.