வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 3 ஜனவரி 2018 (13:08 IST)

சினிமாவில் வாய்ப்பு இல்லை : கார் ஓட்டும் பிரபல நடிகர்

சினிமாவில் சரியான வாய்ப்பு இல்லாததால் பிரபல கன்னட நடிகர் கார் ஓட்டுனராக வேலை பார்ப்பது தெரியவந்துள்ளது.

 
90களில் கன்னட சினிமா உலகில் நுழைந்து 25 வருடங்களாக 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ஷங்கர் அஸ்வத். ஆனால், சமீப காலமாக அவருக்கு சரியான வாய்ப்புகள் இல்லை. எனவே, வாடகைக்கு கார் அனுப்பும் உபேர் நிறுவனத்தில் அவர் பகுதி நேர வேலை பார்க்கிறார். 
 
இதுபற்றி கருத்து தெரிவித்த ஷங்கர் அஸ்வத் “ வாய்ப்புகாக நான் யாரிடம் பிச்சை கேட்க விரும்பவில்லை. எனக்கு என் சுயமரியாதை மிகவும் முக்கியம்.  அதனால் கார் ஓட்டும் வேலை பார்க்கிறேன். அதில் நல்ல வருமானம் கிடைக்கிறது. இது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என அவர் கூறுகிறார்.
 
காரில் வருபவர்கள் தன்னை அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காக மப்ளர் மூலம் தலை மற்றும் முகத்தை மூடிக்கொள்கிறார். இவரின் தந்தை கே.எஸ்.அஸ்வத் கன்னடத்தில் 370 படங்கள் நடித்த பிரபல நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த விவகாரம் கன்னட சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.