1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 8 டிசம்பர் 2017 (14:31 IST)

என்னை உன்னோடு அழைத்து செல்; காதலனை பிரிந்து கதறி அழுத பிக்பாஸ் பிரபலம்

ஹிந்தி பிக்பாஸில் தற்போது 11வது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே  மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ஹிந்தியில் இந்நிகழ்ச்சியின் 11வது சீசன் பாலிவுட்டில் தற்போது நடந்து வருகிறது. இதில் ஹினா கான் என்ற பிரபல நடிகை பங்கேற்றுள்ளார். தமிழில் பிரபலங்களின் உறவினர்கள் வந்த சீசனை போல் ஹிந்தியில் நடந்து வருகிறது. ஹினா கானின் காதலர் ராக்கி ஜெயிஸ்வால் நிகழ்ச்சிக்கு செல்ல இருவரும் தங்களது காதலை பகிர்ந்துகொண்டனர். பின் அவர் நிகழ்ச்சிவிட்டு  வெளியே செல்ல ஹினா கான் என்னை உன்னோடு அழைத்து செல் என்று கதறி அழுகிறார். இவர் கதறி அழுத வீடியோ  தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
ஹிந்தி பிக்பாஸில் போட்டியாளர் நடிகை ஹினாகான் தென்னிந்திய சினிமாவில் உள்ள நடிகைகள் குண்டாக இருப்பதைப் பற்றி  பேசியது பெரும் சர்ச்சையானது. இதனால் அவரது பேசியதை கேட்ட நடிகை ஹன்ஷிகா கோவமாக திட்டி ட்வீட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.