செவ்வாய், 27 ஜனவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Mahindran
Last Modified: வெள்ளி, 23 ஜனவரி 2026 (20:55 IST)

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

draupathi2
பாமகவின் ஆதரவாளரான இயக்குனர் மோகன்.ஜி தொடர்ந்து நாடகக் காதல் என்கிற கான்செப்டில் திரைப்படங்களை இயக்கி வந்தார். இவர் இயக்கிய திரௌபதி படத்திலும் இதே கான்சப்ட்தான். இந்நிலையில்தான், மோகன்.ஜி இயக்கத்தில் ரிஷி ரிச்சர்ட் நடித்துள்ள திரௌபதி 2 திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது.
இந்த படம் பற்றிய விமர்சனத்தை பார்ப்போம்.

சுல்தான் அரசர் தென்னிந்தியாவில் நுழைந்து அங்கு பெருமாள் கடவுளை வணங்கும் மக்களை மிரட்டி வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்ய முயற்சி செய்கிறான். அதோடு பெண்களையும் பாலியல் தொல்லை செய்ய முயல்கிறான்..  அரசரின் படைத்தளபதியான  ரிச்சர்ட் ரிஷி பொங்கி எழ என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை. படத்தின் முதல் பாதி கொஞ்சம் பரவாயில்லை.. காட்சிகள் போர் அடிக்காமல் செல்கிறது.

படத்தில் வரும் டிவிஸ்ட்களும் ஓகே. படத்தில் சில காட்சிகளில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள். அதோடு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்களும் பரவாயில்லை.
மேலும், லைவ் லொகேஷனில் எடுத்த காட்சிகள் நன்றாக இருக்கிறது. ஆனால் இரண்டாம் பாதி சற்று தொய்வு.. படத்தில் திரைக்கதையை மோகன்.ஜி சரியாக எழுதவில்லை. எனவே படத்தில் வரும் காட்சிகள் ரசிகர்களின் மனதில் ஒட்ட மறுக்கிறது.

திரைக்கதை இன்னும் சரியாக அமைத்திருந்தால் திரௌபதி 2 ஒரு நல்ல படமாக வந்திருக்கும்..
படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் வந்தாலும் அவர்களின் கதாபாத்திரங்கள் அழுத்தமாக எழுதப்படவில்லை என்பதால் ரசிகர்கள் மனதில் ஒட்டவில்லை. ரிச்சர்ட் ரிஷி வழக்கம் போல நடித்திருக்கிறார்.. பெரிதாக ஒன்றுமில்லை.. ஜிப்ரானின் பின்னணி இசை நன்றாக இருக்கிறது.. திரௌபதி முதல் பாகம் அளவுக்கு கூட இந்த படம் பேசப்படாது என்றே தோன்றுகிறது
..