சூட்டிங்கை கேன்சல் செய்து ‘மங்காத்தா’ படம் பார்க்க வந்த சிம்பு! இதுதான் தீவிர வெறியனா?
அஜித் நடித்த மங்காத்தா திரைப்படம் இன்று ரீ ரிலீஸ் ஆகியிருக்கிறது. ஒரு பக்கம் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். இன்னொரு பக்கம் சிம்புவை டேக் செய்து வா தலைவா வந்து படத்தை பாரு.. அரசன் படத்தின் படப்பிடிப்பை கேன்சல் செய்துவிட்டு வா என சோசியல் மீடியாக்களில் அவரை அழைத்துக் கொண்டே இருக்கின்றனர். சம்பந்தமே இல்லாமல் சிம்புவை ஏன் ரசிகர்கள் இந்த அளவு டார்ச்சர் செய்கிறார்கள் என்று பார்த்தால் அதற்கு பின்னணியில் ஒரு பிளாஷ்பேக்கே இருக்கிறது.
ஆம்.. கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான மங்காத்தா திரைப்படத்தின் போது அந்த படத்தின் முதல் நாள் காட்சியை எப்படியாவது பார்க்க வேண்டும் என சிம்பு நினைத்து இருக்கிறார். அந்த சமயத்தில் அவர் ஒஸ்தி திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக மைசூரில் இருந்தாராம். இது அஜித்துக்கு 50வது திரைப்படம். அதுவும் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார். வெங்கட் பிரபு இயக்கம், யுவன் சங்கர் ராஜா இசை என இந்த படத்தை எப்படியாவது பார்த்தே ஆக வேண்டும் என பிரேம்ஜியிடம் புலம்பி இருக்கிறார்.
அதனால் நான் ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு படம் பார்க்க வருகிறேன் என்று சிம்பு சொல்லி இருக்கிறார். அவர் சொன்னபடியே மங்காத்தா ரிலீஸ் சமயத்தில் ஒஸ்தி படத்தின் சூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு படம் பார்த்து மீண்டும் மைசூருக்கு சென்று இருக்கிறார். அந்த அளவுக்கு ஒரு வெறித்தனமான ரசிகராம் சிம்பு. இதைப் பற்றி ஒரு பழைய பேட்டியில் சிம்பு பேசியிருக்கிறார்.
அஜித் சாருக்கு 50வது படம். ஒரு நெகட்டிவ் ஷேடில் நடிக்கிறார், யுவன் சங்கர் ராஜா இசை. அதனால் 50 வது படம் என்பது அனைவருக்குமே ஒரு ஸ்பெஷலான படம். அதை முதல் நாள் ஷோவில் வந்து பார்க்க வேண்டும் என எனக்கு ஆசையாக இருந்தது. அதனால் தான் வந்து படம் பார்த்தேன் என்று ஒரு ரசிகராக அந்த சமயத்தில் மங்காத்தா படம் குறித்த தன்னுடைய அனுபவங்களை சிம்பு பகிர்ந்து உள்ளார்.