Jananayagan: ஜனநாயகனுக்கு தேதி வச்சாச்சி!.. தீர்ப்பு எப்போது தெரியுமா?!..
விஜய் நடித்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். தெலுங்கில் பாலையா நடித்து வெளிவந்த பகவந்த் கேசரி படத்தின் கதையை கொஞ்சம் மாற்றி இந்த படத்தை உருவாக்கியுள்ளனர்.
ஜனவரி 9ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆன அறிவிக்கப்பட்டது. ஆனால் படம் சென்சாரில் சிக்கியால் படம் இதுவரை வெளியாகவில்லை.
இது தொடர்பான மேல்முறையீட்டு சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர் நீதி உயர்நீதிமன்றத்தில் நடந்த போது தயாரிப்பு நிறுவனம் மற்றும் சென்சார் போர்டு இருதரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்டார். அன்றே தீர்ப்பு வழங்க அவர் திட்டமிட்டிருந்தாலும் இரு தரப்பு வாதங்களையும் முன்வைக்க அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் தேதி சொல்லாமல் அவர் தீரப்பை வைத்தார்.
இந்நிலையில்தான் ஜனநாயகன் படம் தொடர்பான வழக்கில் வருகிற 27ம் தேதி காலை 10:30 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. படத்திற்கு சாதகமாக தீர்ப்பு வெளியானால் வருகிற 29ம் தேதி படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது