வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 5 ஜனவரி 2018 (12:54 IST)

செல்ஃபி எடுக்க நடிகையின் முடியை இழுத்த நபர்; அலறிய பிக்பாஸ் பிரபலம்

தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஹிந்தியில் இந்நிகழ்ச்சியின் 11வது சீசன் பாலிவுட்டில் தற்போது நடந்து வருகிறது. 
இந்த 11 சீசனில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் நடிகர் சல்மான் கான். இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக 12 சாதாரண ஆட்களும், 6 சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். இதில் ஹினா கான் என்ற பிரபல நடிகை பங்கேற்றுள்ளார்.  தற்போது பாலிவுட்டில் நட்க்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 11வது சீசன் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கு கொண்ட நடிகை ஹினாகான், தென்னிந்திய சினிமாவில் உள்ள நடிகைகள் குண்டாக இருக்கிறார்கள் என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் நடிகை ஹன்சிகா அவரை திட்டி ட்வீட் செய்திருந்தார். 
 
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தில் 3 போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கான வாக்குகளை ரசிகர்கள் ஒரு  குறிப்பிட்ட மாலுக்கு வந்து போட வேண்டும். இந்நிலையில் அந்த நிகழ்வு நேற்று நடைபெற்றது. அப்போது போட்டியில் பங்கு கொண்ட அந்த பிக்பாஸ் பிரபலங்களும் வந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர் நடிகை ஹினா கானின் முடியை  இழுத்து செல்ஃபி எடுக்க முயன்றிருக்கிறார். இந்த சம்பவம் அங்கு பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.