செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 16 டிசம்பர் 2017 (11:19 IST)

‘பிக் பாஸ்’ காஜல் நடிக்கும் ‘ஒன்றா இரண்டா ஆசைகள்’

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காஜல் பசுபதி நடிக்கும் படத்திற்கு ‘ஒன்றா இரண்டா ஆசைகள்’ என்று பெயர்  வைக்கப்பட்டுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில், 19 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில், நடிகை காஜல்  பசுபதியும் ஒருவர். ஆனால், 16 நாட்கள் மட்டுமே ‘பிக் பாஸ்’ வீட்டில் அவர் இருந்தார். ஆனாலும், அந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கு நிறைய பப்ளிசிட்டி கிடைத்துள்ளது.
 
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு, அதில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு நிறைய சினிமா வாய்ப்புகள் வருகின்றன. காஜல் பசுபதிக்கும் நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன. அதில் ஒன்றுதான் 'ஒன்றா இரண்டா ஆசைகள்'. அபிலேஷ் ரவி இயக்கும்  இந்தப் படத்தில், அஸ்வின் ஜெரோம் ஹீரோவாக நடிக்கிறார். ராஜ் கே சோழன் இசையமைக்க, இளையராஜா எடிட் செய்கிறார்.  48 பிரேம்ஸ் கம்பெனி இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.