1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Massive Police Deployment in Thiruparankundram Over Deepathoon Row Ahead of Karthigai Deepam

திருப்பரங்குன்றம் தீபம்.. 5600 போலீசார் பாதுகாப்பு.. பணியில் 12 எஸ்.பி, 8 ஏ.டி.எஸ்.பி, 50-க்கும் மேற்பட்ட டி.எஸ்.பி...

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சையால், 5,600 போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். 12 எஸ்.பி, 8 ஏ.டி.எஸ்.பி, 50-க்கும் மேற்பட்ட டி.எஸ்.பி மற்றும் 132 இன்ஸ்பெக்டர்களுடன் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
 
பல ஆண்டுகளாக உச்சி பிள்ளையார் கோவில் அருகே தீபம் ஏற்றப்படும் நிலையில், தர்காவுக்கு அருகிலுள்ள கல் தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. கடந்த 2025 மற்றும் 2026 ஜனவரியில் உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றம் சென்றது. கடந்த நவம்பர் 20-ஆம் தேதி உச்ச நீதிமன்றம், இன்று மட்டும் ஒருமுறை தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதித்து, பொதுமக்கள் செல்லத் தடை மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தது.
 
இருப்பினும், பிரதான வழக்கு ஜனவரி 2027-ல் விசாரிக்கப்பட உள்ள நிலையில், இந்த உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு சட்டம்-ஒழுங்கைக் காப்பதில் உறுதியாக உள்ள நிலையில், மோதல்கள் ஏதுமின்றி விழாவை அமைதியாக நடத்தப் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். பக்தர்கள் கட்டுப்பாடுகளை மதித்து அமைதியாகத் தரிசனம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
இணையத்தில் நன்றாக எழுதுபவர்களுக்கு விருது மற்றும் ரூ.25000 பரிசு.. தமிழக அரசின் சூப்பர் திட்டம்...