100 வருஷம் ஆனாலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது - ஆதவ் அர்ஜுனா
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப்போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. அக்கட்சியின் தலைவரும் முன்னாள் நடிகருமான விஜய் முதலமைச்சராகிவிட்டார். விஜயை பொறுத்தவை கட்சியை ஆரம்பித்தபோதே திமுக எங்கள் அரசியல் எதிரி, பாஜக எங்கள் கொள்கை எதிரி என தெளிவாக கூறிவிட்டார்.
அதேநேரம், ஆட்சிக்கு வந்தபின் மத்திய அரசுடன் இணக்கமாக சென்று தமிழ்நாட்டுக்கான நிதியை பெறவேண்டுமென விஜய் நினைக்கிறார். அதனால்தான், பாஜகவை தவெக விமர்சித்து பேசுவதில்லை. விஜயின் தாய் பற்றி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மோசமாக பேசியும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, பாஜகவின் அடிமையாக தவெக மாறிவருகிறது என திமுக பேச துவங்கியிருக்கிறது.
இந்நிலையில், ஐ.யூ.எம்.எல் கூட்டத்தில் நேற்று பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பாஜகவுடன் கூட்டணி வைத்து கலைஞர், ஜெயலலிதா போன்றவர்கள் சறுக்கியிருக்கலாம். ஆனால், இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் தவெக பாஜகவுடன் கூட்டணி வைக்காது என்று பேசியிருக்கிறார்.