புது நடிகர்கள் டெல்லிக்கு போறாங்க!.. ஒன்னும் நடக்காது - ஆதவ் அர்ஜுனா
நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகவும் மாறிவிட்டார். இதையடுத்து, தனுஷ் உள்ளிட்ட சில நடிகர்களுக்கும் அரசியல் ஆசை வந்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது. தனது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசிய தனுஷிடம் அரசியலுக்கு வருவதற்கான நோக்கம் தெரிந்தது.
அதோடு, ஒவ்வொரு மாவட்டத்திலும் தனுஷின் நற்பணி மன்றம் சார்பாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அதோடு, 2028ம் வருடம் அரசியல் கட்சியை தொடங்கி 2031 தேர்தலை அவர் குறி வைத்திருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கிறது. மேலும், சமீபத்தில் தனது அரசியல் கட்சி தொடர்பாக டெல்லிக்கு சென்றாதகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், நேற்று ஒரு விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தவெக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இரண்டு கட்சிகளுக்கும் சமூக நீதி, மதச்சார்பின்மை என்கிற ஒரே கொள்கைதான். அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஒன்று சேர்ந்து 2029 தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும்.. இந்தியாவில் மதச்சார்பற்ற கொள்கையின் வெற்றி தமிழகத்திலிருந்து உருவாக்கப்படும்.. இதை உடைப்பதற்காகத்தான் புதிய நடிகர்கள் டெல்லிக்கு சென்று உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.. அதெல்லாம் ஒன்று நடக்காது என அவர் கூறியிருக்கிறார்.