1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. free books to pembur area school students

மாணவர்களுக்கு இலவசம்!. விஜய் அலுவலகத்தில் கல்வி உபகரணங்கள்!.. அதிரடி அறிவிப்பு...

vijay
2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சர் பதவியில் அமர்ந்துள்ளார். இதில், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் விஜய் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதில், திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் ராஜினாமா செய்துவிட்டார். விரைவில் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில், பெரம்பூர் தொகுதியில் உள்ள எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் தங்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை சட்டமன்ற அலுவலத்திற்கு நேரில் வந்து பெறலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதல்வரின் சொந்த தொகுதியான பெரம்பூரில் பரிந்துரையோ கடிதமோ தேவையில்லை.. மாணவர்கள் தங்களது தேவையை மட்டும் தெரிவித்தால் போதும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
நிதி ஆலோசகர் ஹரிஸ் தற்கொலை!.. யுடியூபர் ஜேசன் சாமுவேல் கைது!...