1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. seeman announced naam thamizhar katchi protest

அக்.24ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம்!.. சீமான் அறிவிப்பு...

seeman
நாம் தமிழர் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பவர் கார்த்திகா. நடந்து முடிந்த தாராபுரம் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக களமிறங்கினார்.

தாராபுரம் இடைத்தேர்தலின் போது இவர் பல அலப்பறைகளை செய்தார். முதல்வர் விஜய் கடுமையாக விமர்சித்து மேடைகளில் பேசினார். முதல்வர் ரோட் ஷோ செய்யவிருந்த பாதையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அனுமதி பெறாமல் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டது. இது தொடர்பாக கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று காலை தமிழக காவல் துறை கார்த்திகாவை கைது செய்தது. இந்நிலையில், கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வருகிற 24ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழர் கட்சி அறிவித்திருக்கிறது...
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் வரை நீடிக்கும்!.. வானிலை மையம் தகவல்...