திடீரென சட்டப்பேரவைக்கு வந்த இன்பநிதி.. என்ன காரணம்?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடர் நிகழ்வுகளை நேரில் பார்வையிடுவதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி இன்று சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தற்போது துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் மற்றும் கேள்வி நேரம் உள்ளிட்ட அலுவல்கள் நடைபெற்று வருகின்றன.
இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில், முதல்வர் விஜயின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில், சட்டப்பேரவை நடவடிக்கைகளை நேரில் காண வந்த இன்பநிதி, பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்து கூட்டத்தொடரை கவனித்து வருகிறார். குறிப்பாக, தனது தந்தை உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேசுவதை அவர் பார்வையிட்டு வருகிறார்.
சட்டப்பேரவை மானியக் கோரிக்கை விவாதங்களை பொதுமக்களும் நேரில் பார்வையிட அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதால், அனுமதி சீட்டைப் பெறுவதற்காக பொதுமக்கள் தினமும் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக கூறப்படுகிறது.
Edited by Siva
