செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 17 பிப்ரவரி 2021 (14:18 IST)

இனி ட்விட்டரில் வாய்ஸ் மெசேஜும் அனுப்பலாம்! – புதிய சேவை தொடக்கம்!

உலகம் முழுவதும் சமூக வலைதள செயலிகளில் அதிகமாக ட்விட்டர் பயன்பாட்டில் உள்ள நிலையில் வாய்ஸ் மெசேஜ் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் ட்விட்டர் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். உலகம் முழுவதும் உள்ள அரசியல், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் தங்கள் கருத்துகளை தங்களை பின் தொடர்பவர்களுடன் கருத்து பரிமாற்றத்திற்கு ட்விட்டரையே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ட்விட்டர் இந்தியாவில் முதன்முறையாக வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் சேவையை தொடங்கியுள்ளது. பரிசோதனையாக இந்த திட்டம் ஜப்பான், இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் முயற்சித்து பார்க்கப்படுவதாகவும், இந்தியா ட்விட்டரின் முக்கிய சந்தையாக உள்ளதால் மேம்படுத்தப்பட்ட சேவைகளை வழங்குவது அவசியம் என்றும் அதன் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.