திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 17 பிப்ரவரி 2021 (11:41 IST)

மேலாடையின்றி கழுத்தில் விநாயகர் டாலர் - சர்ச்சையை கிளப்பும் பாப் பாடகி!

ரியான்னா மேலாடை அணியாமல், கழுத்தில் விநாயகர் டாலர் அணிந்துள்ள படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

 
மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்து இந்தியாவில் பரபரப்பான சூழ்நிலையை உருவாக்கியவர் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரியான்னா. 
 
தற்போது, ரியான்னா மேலாடை அணியாமல், கழுத்தில் விநாயகர் டாலர் அணிந்துள்ள படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 
 
இதனை கண்ட பாஜக மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் உறுப்பினர்கள், இது இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் செயல் என கூறி டெல்லி மற்றும் மும்பை போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர்.