வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 13 பிப்ரவரி 2021 (23:52 IST)

தனுஷின் ''கர்ணன்'' படம் எப்போது ரிலீஸ்...தயாரிப்பாளர் தகவல்

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் கர்ணன். இப்படத்தின்  தயாரிப்பாளர் ஒரு  முக்கிய அப்டேட் வெளியிட்டுள்ளார்.

தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக்கிய கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்பணிகள் முடிவடையவுள்ளன.

சமீபத்தில் நடிகர் தனுஷ் தனது படம் தியேட்டரில் வெளியாவது குறித்து தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்து ஒரு டுவிட் பதிவிட்டிருந்தார். இதனால் படக்குழுவும், தியேட்டர் அதிபர்களும், ரசிகர்களும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

வரும் 2021 ஏப்ரலில் கர்ணன் படம் தியேட்டரில் ரிலீஸாகும் என இப்படத்தின் தயாரிப்பாளர்.

எஸ்.தாணு உறுதிப்படுத்தினார். ஆனால் எப்போது என்று தெரிவிக்கவில்லை. இதனால் படம் எப்போது ரிலீசாகும் என தனுஷ் ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழிப்பி வந்த நிலையில், தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு முக்கிய அப்டேட் வெளியிட்டுள்ளார..


அதில், தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நாளை காலை 11;06 மணிக்கு  வெளியிடப்படும் என்றும் அதேபோல் இப்படம் ஏப்ரல்  மாதம் எந்தத் தேதியில் வெளியாகும் என்பதையும்  தெரிவிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாளை சமூக வலைதளங்களில் எப்படியெல்லாம் டிரெண்டிங் செய்யலாம் என்பது குறித்து தனுஷ் ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்.

மேலும், கர்ணன் படத்தின் பாடல்கள் உரிமையை பிரபல திங்க் மியூசிக் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.