புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 15 பிப்ரவரி 2021 (11:40 IST)

பாஜக அரசுன்னு ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே: கமலை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்!

பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திக் கொண்டிருக்கும் மத்திய அரசு, சமையல் கியாஸ் விலையையும் உயர்த்தியுள்ளது மக்கள் மீது நிகழ்த்தும் சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்று கமலஹாசன் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த டுவீட்டில் மத்திய அரசு என்று கூறுவதற்கு பதிலாக பாஜக அரசு என்று கூறி இருக்கலாமே என நெட்டிசன்கள் கமலஹாசனை கிண்டல் செய்து வருகின்றனர் 
 
கடந்த சில வாரங்களாக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வரும் கமலஹாசன் மத்திய மற்றும் மாநில அரசுகளை கடுமையாக தாக்கி வருகிறார். ஆனால் அதே நேரத்தில் மாநில அரசை அதிமுக அரசு என குறிப்பிட்டு அமைச்சர்கள் பெயரையும் குறிப்பிட்டு விமர்சனம் செய்து வரும் கமல்ஹாசன், மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக அரசின் தவறுகளை மேலோட்டமாக கூறுவதாக விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் தற்போது தனது டுவிட்டரில் கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள கமல்ஹாசன் இது மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்று கூறியுள்ளார். மத்திய அரசு என்று கூறுவதற்கு பதிலாக பாஜக அரசு என்றோ மோடி அரசு என்றோ கமல்ஹாசன் கூறி இருக்கலாம் என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
 
கமல்ஹாசனின் டுவிட் இதோ: பெட்ரோல், டீசல் விலை அன்றாடம் உயர்ந்துகொண்டே இருக்கிறது, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ஒரே மாதத்தில் ரூ.75/-உயர்ந்துள்ளது. மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் இது. இந்த அக்கறையற்ற போக்கினால் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயர்ந்து ஏழ்மை அதிகரிக்கும்.