நீங்க எவ்ளோ பெரிய நிறுவனமா வேணாலும் இருங்க.. ஆனா..! – வாட்ஸ் அப்புக்கு உச்சநீதிமன்றம் வார்னிங்!

Prasanth Karthick| Last Modified திங்கள், 15 பிப்ரவரி 2021 (16:16 IST)
சமீபத்தில் வாட்ஸ் அப் செயலியின் தனிநபர் கொள்கைகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து விளக்கமளிக்க வாட்ஸ் அப்புக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உலகம் முழுவதும் வாட்ஸப் செயலியை சுமார் 5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் வாட்ஸப் செயல்பாட்டுக்கு கொண்டு வந்த புதிய தனிநபர் கொள்கைகள் தனிநபர் தகவல்களை சேமிக்கும் வகையில் உள்ளதாக புகார் எழுந்தது. இந்நிலையில் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் விளக்கமளிக்க வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் இந்த விசாரணையின்போது பேசிய நீதிபதிகள் “நீங்கள் எவ்வளவு பில்லியன் வருமானம் ஈட்டும் நிறுவனமாகவும் இருக்கலாம். ஆனால் அதைவிட மக்களின் சுயவிவரங்கள் பிரைவசியை காப்பது முக்கியம் என பேசியுள்ளனர்.

இதற்கு பதிலளித்து வாட்ஸ் அப் நிறுவனம் ஐரோப்பாவில் பிரைவசிக்கே தனி சட்டம் உள்ளதாகவும் அதுபோன்ற சட்டம் இந்தியாவில் இருந்தால் தாங்கள் அதை பின்பற்றி கொள்கைகளை வகுக்க முடியும் என்று கூறியுள்ளதுடன், தனிநபர் தகவல்களை வாட்ஸ் அப் சேமிக்கவில்லை என்றும் விளக்கமளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதில் மேலும் படிக்கவும் :