1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
  4. Today metch between CSK and MI

இன்னைக்கு ஆட்டம் அனல் பறக்குமா? – தயாராகும் பல்தான்ஸ் Vs விசில் போடு ரசிகர்கள்!

IPL
இன்றைய ஐபிஎல் போட்டியில் முதன்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக் கொள்ள உள்ளதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விருவிருப்பாக நடந்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனி ஆக்‌ஷன் காட்டி வருகிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் மோசமான ஆட்டத்தால் தரவரிசையில் கடைசி இடத்திற்கு சென்ற சிஎஸ்கே இந்த சீசனில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 போட்டிகளில் 5 போட்டிகளில் வென்று முதல் இடத்தில் உள்ளது.

இதற்கு நேர்மாறாக நடப்பு சேம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடிய மும்பை அணி 3 போட்டிகளில் மட்டுமே வென்று தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்றை ஆட்டத்தில் வெல்ல வேண்டிய கட்டாயம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு உள்ளது.

மேலும் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் இடையேயான இந்த சீசனின் முதல் போட்டி இது என்பதால் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
யார் பலசாலின்னு பாப்போமா..? – ஜெர்சியை கழட்டி சிக்ஸ் பேக் காட்டிய கெயில், சஹால்!