வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By sinoj
Last Updated : சனி, 2 அக்டோபர் 2021 (23:32 IST)

ஐபிஎல்-2021 ; அதிவேக அரைசதம் அடித்த ராஜஸ்தான் வீரர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர் ஜெய்ஸ்வால் 19 பந்துகளில் அரைசதம் அடித்துச் சாதனை படைத்துள்ளார்..

சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி வீரர்கள் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் அடித்தனர்.

இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது ராஜஸ்தான் அணி ஆடியது.

இதில் தொடக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 19 பந்துகளில் அரைசதம் அடித்து சர்வதேச போட்டியில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 2 வது இடம் பித்துள்ளார்.  இதற்கு முன் இஷான் கிஷான் கடந்த 2018 ஆம் ஆண்டு 17 பந்தில் அரைசதம் கொல்கத்தா அணிக்கு எதிரான அடித்தது குறிப்பிடத்தக்கது.