1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
  4. Important players sold out in IPL 2022 Auction

முன்னணி வீரர்கள் ஏலம் முடிந்தது: யார் யார் எந்த அணியில்?

மெகா T20 ஏலம்- 2022
ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூருவில் நடைபெற்று வரும் நிலையில் இதில் முதல் செட் வீரர்கள் ஏலம் அதாவது முன்னணி வீரர்கள் ஏலம் முடிந்துள்ளது. 

 
இந்தியன் ப்ரீமியர் லீக் டி 20 போட்டிகள் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் கவனிக்கப்படும் போட்டி தொடராக உள்ளது. கடந்த ஆண்டு வரை ஐபிஎல்லில் 8 அணிகள் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு புதிதாக 2 அணிகள் சேர்த்து மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளன.
 
ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூருவில் நடைபெற்று வரும் நிலையில் இதில் முதல் செட் வீரர்கள் ஏலம் அதாவது முன்னணி வீரர்கள் ஏலம் முடிந்துள்ளது. இந்நிலையில் இதில் எந்த வீரர்கள் எந்த அணி, எவ்வளவு தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர் என்ற விவரம் இதோ... 
 
அஸ்வின்  - ரூ.5 கோடி - ராஜஸ்தான் ராயல்ஸ்
ஷிகர் தவான் - ரூ.8.25 கோடி - பஞ்சாப் கிங்ஸ்
ஷ்ரேயஸ் அய்யர் - ரூ.12.25 கோடி - கேகேஆர்
ரபாடா - ரூ.9.25 கோடி - பஞ்சாப் கிங்ஸ்
ட்ரெண்ட் போல்ட் - ரூ. 8கோடி - ராஜஸ்தான் ராயல்ஸ்
கமின்ஸ் - ரூ.7.75 கோடி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
டுபிளெசிஸ் - ரூ.7 கோடி - ஆர்சிபி
டி காக் - ரூ. 6.75 கோடி - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
வார்னர் - ரூ.625 கோடி - டெல்லி கேப்பிடல்ஸ்
ஷமி - ரூ.6.25 கோடி - குஜராத் ஜெயண்ட்ஸ்
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
சுரேஷ் ரெய்னாவை கைவிட்ட சிஎஸ்கே!