செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 24 நவம்பர் 2021 (10:28 IST)

ஏப்ரல் 2 ல் சென்னையில் தொடங்குகிறது ஐபிஎல் 2022?

அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் சென்னையில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் கொரோனா தொற்று காரணமாக இரண்டு கட்டங்களாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து முடிந்துள்ளது. இதில் சென்னை அணி நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. இதையடுத்து அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஏப்ரல் 2 ஆம் தேதி சென்னையில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ தகவல் அனுப்பியுள்ளதாக சொல்லப்படுகிறது.

அடுத்த ஆண்டு மேலும் இரு அணிகள் வர உள்ளதால் கிட்டத்தட்ட இரண்டரை மாதம் ஐபிஎல் தொடர் நடக்க வாய்ப்புள்ளது. ஜூன் மாத மத்தியில் இறுதிப் போட்டி நடக்க வாய்ப்புள்ளது.