1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 12 பிப்ரவரி 2022 (13:00 IST)

ஐபிஎல் ஏலம் 2022 – இதுவரை ஏலத்தில் தேர்வான வீரர்கள் விவரம்

ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் தொடங்கி நடந்து வரும் நிலையில் ஷிகார் தவான் ரூ.8.25 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

இந்தியன் ப்ரீமியர் லீக் டி 20 போட்டிகள் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் கவனிக்கப்படும் போட்டி தொடராக உள்ளது. கடந்த ஆண்டு வரை ஐபிஎல்லில் 8 அணிகள் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு புதிதாக 2 அணிகள் சேர்த்து மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளன.

அணிகளுக்கான வீரர்கள் ஏலம் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இந்த ஏலத்தில் இதுவரை ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் மற்றும் அணிகள் குறித்த விவரங்கள்

டூ ப்ளெசிஸ் – ஆர்சிபி – 7 கோடி
முகமது ஷமி – ஆர்சிபி – 6.25 கோடி
ஸ்ரேயாஸ் ஐயர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 12.25 கோடி
ட்ரெண்ட் போல்ட் – ராஜஸ்தான் ராயல்ஸ் – 8 கோடி
ரவிசந்திரன் அஸ்வின் – ராஜஸ்தான் ராயல்ஸ் – 5 கோடி
காகிசோ ரபாடா – பஞ்சாப் கிங்ஸ் – 9.25 கோடி
பாட் கம்மின்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 7.25 கோடி
ஷிகார் தவான் – பஞ்சாப் கிங்ஸ் – 8.25 கோடி