வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 7 அக்டோபர் 2021 (15:12 IST)

மோதிக்கொள்ளும் கிங்ஸ்: CSK vs PBKS

அபுதாபியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் - ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
 
ஆம், இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில் சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதனால் சென்னை அணி முதலில் களமிறங்க உள்ளது.
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 வெற்றி, 4 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் இருக்கும் சென்னை அணி பஞ்சாப்பை வீழ்த்தி மீண்டும் முதல் இடத்தை பிடிக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.