சாம்சன் அபார சதம்! 199 டார்கெட் கொடுத்த ராஜஸ்தான்

Last Modified வெள்ளி, 29 மார்ச் 2019 (22:16 IST)
இன்று நடைபெற்று வரும் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ஆரம்பத்தில் நிதானமாக விளையாடினாலும் கடைசி ஐந்து ஓவர்களில் ஐதராபாத் பந்துவீச்சாளர்களின் பந்துகளை துவம்சம் செய்தது. குறிப்பாக நட்சத்திர பேட்ஸ்மேன் சாம்சன், ருத்ரதாண்டவம் ஆடி 55 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 10 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் அடங்கும்.
சாம்சனை அடுத்து தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ரஹானே பொருப்புடன் விளையாடி 70 ரன்கள் எடுத்தார். கடைசி நேரத்தில் களமிறங்கிய ஸ்டோக்ஸ் 9 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 198 ரன்கள் குவித்துள்ளது. ஐதராபாத் தரப்பில் ரஷித்கான் ஒரு விக்கெட்டையும், நாடீம் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்
இந்த நிலையில் 199 என்ற கடின இலக்கை நோக்கி ஐதாராபாத் தற்போது விளையாடி வருகின்றது. வார்னர் 18 பந்துகளில் 32 ரன்கள் எடுத்துள்ளார். சற்றுமுன் வரை இந்த அணி 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்துள்ளதுஇதில் மேலும் படிக்கவும் :