வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 26 மார்ச் 2019 (10:51 IST)

சிஎஸ்கேவின் அடுத்த போட்டிக்கு டிக்கெட் விற்பனை: சேப்பாக்கத்தில் குவிந்த இளைஞர்கள்

கடந்த 23ஆம் தேதி சென்னையில் ஐபிஎல் போட்டியின் முதல் போட்டி நடந்த நிலையில் அந்த போட்டியில் பெங்களூரு அணியை சென்னை அணி வீழ்த்தியது. இந்த நிலையில் இன்று டெல்லியில் டெல்லி மற்றும் சென்னை அணிகள் மோதவுள்ளது
 
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அடுத்த போட்டி வரும் 31ஆம் தேதி சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. இந்த டிக்கெட்டை வாங்க இன்று அதிகாலை முதலே இளைஞர்கள் சென்னை சேப்பாகம் மைதானத்தில் உள்ள டிக்கெட் கவுண்டர் முன் நீண்ட வரிசையில் நின்றனர்.
 
குறைந்தபட்ச டிக்கெட்டின் விலை ரூ.1300ஆக இருந்தாலும் நீண்ட வரிசையில் நின்று ஏராளமானோர் டிக்கெட்டுக்களை வாங்கி செல்கின்றனர். டிக்கெட்டுக்களை வாங்கியவர்கள் தங்கள் டிக்கெட்டுக்களை சமூக வலைத்தளத்தில் புகைப்படமாக பதிவு செய்து தங்கள் மகிழ்ச்சியினை தெரிவித்து வருகின்றனர். ஆன்லைனிலும் கவுண்டரிலும் விறுவிறுப்பாக டிக்கெட் விற்பனை நடந்து வருவதால் இன்னும் சில நிமிடங்களில் டிக்கெட்டுக்கள் முற்றிலும் விற்பனையாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது