ஐபிஎல் 2019: டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச முடிவு

Last Modified வியாழன், 28 மார்ச் 2019 (19:50 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டியின் 7வது போட்டி இன்று பெங்களூரு மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் பெங்களூரு அணியின் கேப்டன் விராத் கோஹ்லி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இன்னும் சில நிமிடங்களில் மும்பை அணி பேட்டிங் செய்யவுள்ளது
இரு அணிகளுமே இந்த தொடரின் முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளதால் இந்த போட்டியில் முதல் வெற்றியை ருசிக்க தீவிரமாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது

பெங்களூரு அணியில் விராத் கோஹ்லி, பார்த்தீவ் பட்டேல், மியான் அலி, டிவில்லியர்ஸ், ஷிம்ரான் ஹெட்மயர், டியூப், காலின், கிராந்தோம், நவ்தீப் சயனி, சாஹல், உமேஷ் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் ஆடும் 11 பேர் அணியில் உள்ளனர்
அதேபோல் மும்பை அணியில் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், யுவராஜ்சிங், கெய்ரான் பொல்லார்டு, ஹர்திக் பாண்ட்யா, க்ருணால் பாண்ட்யா, மார்கண்டே, மெக்லன்கான், மலிங்கா மற்றும் பும்ரா ஆகியோர் ஆடும் 11 பேர் அணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :